காவல்துறை அதிகாரிகள் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு..! புதிய அறிவிப்புகளுக்கு நன்றி

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (07.09.2026) காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் உயர் அலுவலர்கள், காவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

2026–2027ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மானியக் கோரிக்கைகளின்போது, துறைகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு, காவலர் நலன் மற்றும் நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக முதலமைச்சர் பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தார்.

காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் வளர்ச்சிக்கும், பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், துறை சார்ந்த மூத்த அதிகாரிகளும் காவலர்களும் முதலமைச்சரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது, அரசின் புதிய அறிவிப்புகளுக்கு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply