காவல்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.71.54 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு

காவல் நிலையங்களின் நிர்வாகம் மற்றும் செயலாக்கப் பணிகளை வலுப்படுத்த நடவடிக்கை – குற்றத்தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

சென்னை, அக்டோபர் 21:

தமிழ்நாடு அரசு, சட்டம் மற்றும் ஒழுங்கைக் சிறப்பாகப் பராமரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை அமைத்தல், பொது அமைதியை நிலைநிறுத்துதல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு காவல்துறையின் திறனை மேம்படுத்துவதுடன், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போதைப்பொருள் சார்ந்த சமூக விரோதச் செயல்களை ஒழித்தல், இணையவழிக் குற்றங்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்கு அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.

காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயலாக்கப் பணிகளை அதிகரித்து வரும் சூழலில், அதற்கான செலவினங்களும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தின் பல்வேறு நிலைகளில் ஏற்படும் கூடுதல் செலவுகளை எதிர்கொள்வதற்காகத் தமிழ்நாடு காவல்துறைக்கு தேவையான நிதியை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, காவல் நிலையங்களுக்கான நிர்வாக மற்றும் செயலாக்கச் செலவினங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவல்துறையின் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கும், பொதுமக்களுக்கான பாதுகாப்பு சேவைகளை வலுப்படுத்துவதற்கும் இந்த நிதி ஒதுக்கீடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல் நிலையங்களுக்கான செலவினங்கள் உயர்வு

காவல் நிலையங்களின் அன்றாடச் செயல்பாடுகளுக்கான செலவினங்களைச் சமாளிப்பதற்காக, 2026–27ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, காவல் நிலையங்களுக்கான அன்றாடச் செலவினங்களை எதிர்கொள்வதற்காக மாதந்தோறும் வழங்கப்படும் நிதி, முறையே ரூ.3,750-லிருந்து ரூ.30,000 ஆகவும், ரூ.6,000-லிருந்து ரூ.40,000 ஆகவும், ரூ.8,250-லிருந்து ரூ.50,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வு காவல் நிலையங்களின் அன்றாட நிர்வாகச் செலவுகளைச் சமாளிப்பதற்கும், காவல்துறைப் பணிகளைச் சீராக மேற்கொள்வதற்கும் உதவும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.71.54 கோடி நிதி ஒதுக்கீடு

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், நடப்பு நிதியாண்டில் கூடுதல் செலவினங்களுக்காக ரூ.71 கோடியே 54 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறையின் அடிப்படைச் செயல்பாடுகளை வலுப்படுத்துதல், நிர்வாகத் தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் காவல் நிலையங்களின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த நிதி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றத்தடுப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான அரசின் நடவடிக்கைகளில் இதுவும் ஒரு பகுதியாகும்.

Leave a Reply