மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழுவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை! விண்ணப்பிக்க நவம்பர் 13 கடைசி நாள்.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பப் படிவங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை – அக்டோபர் 16:

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழுவில் (State Advisory Board) புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமை விதிகள், 2018 ஆகியவற்றின் அடிப்படையில் மாநில ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இக்குழுவின் பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளதால், புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி

மாநில ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக விண்ணப்பிக்க விரும்புவோர் 13.11.2026 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள், தகுதிகள் தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.scd.tn.gov.in/ என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply