தேனியில் இரவு நேரங்களில் தொடரும் அறிவிக்கப்படாத மின்தடை! புகார் தெரிவிக்க மின்வாரியம் வெளியிட்ட முக்கிய எண்கள்.
தேனி:
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் தடைபடுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக பணியில் ஈடுபட்டு, மின்தடைக்கான காரணத்தை கண்டறிந்து பழுதுகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தேனி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் மின்தடை குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தேனி மாவட்ட மின்தடை நீக்கும் மையத்தை 94983 91876 என்ற தொலைபேசி எண்ணிலும், மின்னகத்தை 94987 94987 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு மின்சாரம் தொடர்பான குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகள், மின்கம்பி மற்றும் மின்சாதனங்களில் ஏற்படும் பழுதுகள் உள்ளிட்ட மின்சாரம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவித்து, விரைவான நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்