4,000 கிலோ பொருட்களுடன் பிரம்மாண்ட கேக் மிக்சிங் – திருவனந்தபுரம் லுலு மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடக்கம்.

திருவனந்தபுரம்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம் லுலு மாலில் பிரம்மாண்டமான கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது. பண்டிகை காலத்தை வரவேற்கும் வகையில் லுலு தயாரிக்கும் பாரம்பரிய பிளம் கேக்குகளுக்கான தயாரிப்பின் தொடக்கமாக இந்த கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஆண்டு சுமார் 4,000 கிலோ எடையிலான பொருட்கள் கலந்து பிரம்மாண்டமான முறையில் கேக் மிக்ஸ் தயாரிக்கப்பட்டது. உலர் பழங்கள், ரிச் ஃப்ரூட்ஸ், தேர்ந்தெடுக்கப்பட்ட வாசனை மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 25 வகையான பொருட்களுடன், பிரெஷ் திராட்சை சாறும் சேர்க்கப்பட்டு இந்த பண்டிகை கால கேக் மிக்ஸ் தயாரிக்கப்பட்டது.

இந்த கேக்குகளுக்காக தயாரிக்கப்பட்ட மிக்ஸ் முழுமையாக ஆல்கஹால் இல்லாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் திருவனந்தபுரம் லுலு மாலில், 19 விதமான சுவைகளில் சுமார் 20,000 பிளம் கேக்குகள் விற்பனைக்காக தயாரிக்கப்பட உள்ளன.

பாரம்பரிய சுவையை கொண்ட கிளாசிக் பிளம் கேக்குகளுடன், புதிய சுவைகள் மற்றும் மாறுபட்ட டெக்ஸ்சர்களில் பல்வேறு கேக் வகைகளும் லுலு ஹைப்பர்மார்க்கெட்டின் கேக் கவுண்டர்களில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பழங்கள், மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் மணமும், பாரம்பரிய சுவைக்கூட்டும் இணைந்ததால் கேக் மிக்சிங் நிகழ்வு பார்வையாளர்களுக்கு சிறப்பு அனுபவமாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர்களான பார்வதி கிருஷ்ணா, கிஷோர் சத்யா, அனீஷ் ரவி, லட்சுமி நாயர் மற்றும் பின்னணி பாடகர் பிரஷோப் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

லுலு குழுமத்தின் பிரதிநிதிகள், ஊழியர்கள் மற்றும் மாலுக்கு வந்திருந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டதால், கேக் மிக்சிங் நிகழ்ச்சி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியதுபோன்ற உற்சாகமான சூழலில் நிறைவடைந்தது.

Leave a Reply