திருவள்ளூர் மாவட்ட கராத்தே போட்டியில் 600 வீரர்கள் பங்கேற்பு: 90 பிரிவுகளில் போட்டிகள்.
திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்கம் சார்பில் நடைபெற்ற 29-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் சுமார் 600 வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
திருவள்ளூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆவடி, அம்பத்தூர், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கராத்தே வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
90 பிரிவுகளில் கராத்தே போட்டிகள்
போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய பாடி பில்டர் திலீபன் குத்துவிளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் தனித்திறன் வெளிப்படுத்தும் கட்டா மற்றும் இருவர் பங்கேற்கும் குமித்தே உள்ளிட்ட மொத்தம் 90 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
பல்வேறு வயது மற்றும் திறன் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் தலைவர் லட்சுமிகாந்தன் பரிசுகள், கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற இந்தப் போட்டியை காணவும், தங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்தவும் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளில் மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான இந்தப் போட்டி நடைபெற்றது.
தமிழக வெற்றிக்குரல்