டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! நவம்பர் 1 முதல் தேர்வுகள் தொடக்கம்.

குரூப்-II, IIA முதல்நிலைத் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு இணையதளங்களில் பதிவேற்றம் – விண்ணப்பதாரர்கள் OTR மூலம் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை, அக்டோபர் 21:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் குரூப்-II மற்றும் IIA பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகளின் ஹால் டிக்கெட் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அறிவிக்கை எண் 07/2026, நாள் 11.08.2026 மற்றும் பிற்சேர்க்கை எண் 7A/2026, நாள் 03.09.2026 ஆகியவற்றின் அடிப்படையில், நேரடி நியமனத்திற்கான குரூப்-II (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 01.11.2026 அன்று நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket), தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது ஒருமுறைப் பதிவு (OTR Dashboard) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

எனவே, தேர்வர்கள் தேர்வுக்கு முன்னதாகத் தங்களது நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையம், தேர்வு நேரம் மற்றும் வழிமுறைகளைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply