தமிழக அரசின் 100 நாள் நல்லாட்சி விழா: கிருஷ்ணகிரியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் – 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

கிருஷ்ணகிரி: தமிழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசின் 100 நாள் நல்லாட்சியை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பாரப்பட்டி ஊராட்சி பகுதியில், நேற்று (30.08.2026) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முரளிதரன் (எ) முரளிவிஜய் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயசூர்யா மற்றும் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திரண்ட கட்சி நிர்வாகிகள்

பொதுக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மற்றும் வழக்கறிஞர் மணிகண்டன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சத்யராஜ், பர்கூர் ஒன்றிய கழக செயலாளர் குமார், பசவராஜ், புஷ்பராஜ், சிவபிரசாத், வெங்கடேஷ், மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் ஜெகதீஸ்வரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மிதுன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், பர்கூர் பேரூர் கழகத்தைச் சேர்ந்த நந்தகுமார், பிரித்திவிராஜ், மணிஷ், நாகோஜனஅள்ளி பேரூர் கழகம் தட்டக்கல் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழக அரசின் 100 நாள் நல்லாட்சியை முன்னிறுத்தியும், அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையிலும் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் அமைப்பு பணிகள், மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் நிர்வாகிகள் பேசினர்.

சிறப்பான ஏற்பாடுகள்

பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை காவேரிப்பட்டினம் ஒன்றியம் பாப்பாரப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த ஸ்ரீதரன், சக்தி, மாலிக் பாஷா, வேல்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டதால் பாப்பாரப்பட்டி ஊராட்சி பகுதியில் விழாக்கோலம் காணப்பட்டது.

Leave a Reply