தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள் – முதல்வர் விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், தவெக-வின் தேர்தல் சின்னமாக ‘விசில்’ சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு விஜய் நன்றி
தமிழக மக்களுக்கு வணக்கம் தெரிவித்து தனது அறிக்கையைத் தொடங்கிய விஜய், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தனக்கு அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராகவும், உறவாகவும் தன்னை ஏற்றுக்கொண்ட தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நோக்கத்திலேயே 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.
— TVK Vijay (@TVKVijayHQ) March 27, 2026
நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக்… pic.twitter.com/cGFXeCuYW0
35 சதவீத வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சி என விஜய் பெருமிதம்
அரசியல் களத்தில் நுழைந்து 27 மாதங்களே ஆன நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைக்காத பேராதரவை மக்கள் வழங்கியுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 35 சதவீத வாக்குகளுடன் தவெகவை தனிப்பெரும் கட்சியாக மக்கள் உயர்த்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் தமிழக மக்களின் முதல் சேவகனாக முதலமைச்சராக பணியாற்றி வருவதாகவும், ஊழலற்ற மற்றும் நேர்மையான நிர்வாகத்தை இலக்காகக் கொண்டு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.
‘விசில்’ சின்னத்துக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்
தவெகவை தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் தேர்தல் சின்னமாக ‘விசில்’ சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி
மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கையுடன், தங்களை நம்பும் ஒட்டுமொத்த மக்களுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என விஜய் தெரிவித்துள்ளார்.
கட்சிக்காக கடுமையாக உழைத்து வரும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளையும் இந்த நேரத்தில் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்வதாகக் கூறியுள்ள விஜய், அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்