“Rowdytime Runner!” — உதயநிதியை கடுமையாக விமர்சித்த தவெக IT விங்..!

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் IT Wing சார்பில் சமூக வலைதளத்தில் பதிவொன்று வெளியாகியுள்ளது.

“Rowdytime Runner!” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்தப் பதிவில், உதயநிதியின் பேச்சு மற்றும் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ள தவெக IT Wing, அவர் பொதுமக்களின் கேள்விகளை நேரடியாக எதிர்கொள்கிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

காலையில் பால்வாடி பாப்பா போல் வருவது முதல், எழுதி கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை திக்கித் திணறி வாசிப்பது வரை பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டியுள்ள அந்தப் பதிவு, “அதிலும் நடக்காததை நடந்ததாகக் கூறி சட்டப்பேரவையைத் தலைவரிடமே கூட்டி வாங்குவது” என விமர்சித்துள்ளது.

மேலும், பிற அமைச்சர்கள் பதில் சொல்லத் தொடங்கினால், அதனை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுவதாகவும், மதியமானாலும் “எனக்கும் பசிக்கும்ல” என்ற மோடுக்கு மாறி சாப்பிடப் போகிறேன் என கூறிவிட்டு ஓடிவிடுவதாகவும் பதிவில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த பால்வாடி பாப்பாவிற்கு பொதுவையாக அப்படியே பதிலைக் கேட்கும் திறன் இல்லையா என்றும், தெம்பு, திறமை, திராணி உள்ளிட்டவை எங்கே இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பயந்து ஒடுவதைப் பரம்பரையாகக் கொண்ட ஓட்டநீதி, திங்கட்கிழமை பதிலை அமர்ந்து கேட்பாரா அல்லது வழக்கம் போல் ஓட்டமெடுப்பாரா என்றும் தவெக IT Wing தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளை மையமாக வைத்து தவெக IT Wing வெளியிட்டுள்ள இந்தக் கடுமையான விமர்சனப் பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

#RunUdhayRun என்ற ஹேஷ்டேக்குடனும் இந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply