ஊத்தங்கரையில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு! சீர்வரிசைப் பொருட்கள் வழங்கி சிறப்பிப்பு.

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சி சமுதாயக் கூடத் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தென்கிழக்கு மாவட்டச் செயலாளருமான டாக்டர் என். இளையராஜா தலைமை தாங்கினார். அவர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் மருத்துவர் மாலதி நாராயணசாமி பங்கேற்றார்.

34 ஊராட்சிகளைச் சேர்ந்த 100 கர்ப்பிணிகளுக்குச் சிறப்பு

ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட 34 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 100 கர்ப்பிணிப் பெண்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களுக்கு வளைகாப்பு நடத்தி, மரியாதை செலுத்தி, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கர்ப்பிணிப் பெண்களின் நலனை முன்னிறுத்தியும், தாய்மை மற்றும் குழந்தை நலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் இத்தகைய சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதிகாரிகள் மற்றும் TVK நிர்வாகிகள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் வட்டாரத் திட்ட அலுவலர் நித்யா, மேற்பார்வையாளர்கள் முருகம்மாள், கல்பனா, மலர்விழி மற்றும் சமூக நலத்துறை அலுவலர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளர் தாமோதரன், மாவட்டப் பொருளாளர் மணிகண்டன், மாவட்டத் துணைச் செயலாளர் கீர்த்தனா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், சிங்காரவேல், ஹரிதாஸ், ஹரிகரன், லோகநாதன், மணிகண்டன், கோவிந்தராஜ், வினோத்குமார், அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரை பேரூராட்சிக் கழகச் செயலாளர் ரமேஷ், இணைச் செயலாளர்கள் இறையன்பு, ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளர்கள் ராமதுரை, தினேஷ் கண்ணன், உமாபதி, சக்திவேல், மத்தூர் ஒன்றியச் செயலாளர்கள் திருமூர்த்தி, சிவா, மாவட்டத் தொண்டரணி அமைப்பாளர் ஜெகன், உறுப்பினர் சேர்க்கைத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் கார்முகில் வேந்தன் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Leave a Reply