ஊத்தங்கரையில் தவெக 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்! திரண்ட தொண்டர்கள்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியின் 100 நாள் சாதனைகளை விளக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்ட செயலாளரும், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் என். இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில வலைத்தள செய்தித் தொடர்பாளர் தமிழன் ராகுல் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

100 நாள் சாதனைகள் குறித்து விளக்கம்

கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள், மக்கள் நலப் பணிகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர்.

மேலும், தமிழக வெற்றி கழகத்தின் அமைப்பு பணிகளை வலுப்படுத்துதல், உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்தல் மற்றும் எதிர்கால அரசியல் செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகள் பேசினர்.

திரண்ட கட்சி நிர்வாகிகள்

பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் தாமோதரன், மாவட்ட மற்றும் துணை நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய மற்றும் பேரூர் கழகப் பொறுப்பாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மகளிரணி மற்றும் தொண்டரணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

நான்கு முனை சந்திப்பில் அரசியல் பரபரப்பு

தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிகளவில் திரண்டதால் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பு பகுதியில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய, பேரூர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டனர்.

Leave a Reply