தீ விபத்தில் வீடுகளை இழந்த 3 குடும்பங்கள்! நிவாரணப் பொருட்கள் வழங்கி உதவிய குருதி கொடை அறக்கட்டளை.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தேவஸ்தானம் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் முழுமையாக எரிந்து சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆம்பூரைச் சேர்ந்த குருதி கொடை அறக்கட்டளை சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தீ விபத்தில் வீடுகள் முழுமையாக சேதம்
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமம், பெரிய பேட்டை சவுக்கு தோப்பு, பங்களா மேடு பகுதியில் வசித்து வரும் தேவா, மகேந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகிய மூன்று பேரின் வீடுகளும் கடந்த 8.10.2026 அன்று மாலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட வாழ்வாதாரத் தேவைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
அரிசி, காய்கறிகள் வழங்கி உதவி
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், ஆம்பூரில் ரத்த தான சேவை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் குருதி கொடை அறக்கட்டளை அமைப்பினர், குடும்பத்தினரைச் சந்தித்து அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய அறக்கட்டளையினரின் இந்தச் செயல், சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
தமிழக வெற்றிக்குரல்