வாணியம்பாடியில் இராமசாமி படையாட்சியார் 109-வது பிறந்தநாள்! சிலைக்கு தலைமைச் செயலக முக்கிய பிரமுகர்கள் மரியாதை.
வாணியம்பாடி:
விடுதலைப் போராட்ட வீரர் S.S. இராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு, வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் J.C.D. பிரபாகர் மற்றும் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, இராமசாமி படையாட்சியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி, வழக்கறிஞர் சையத் புர்ஹானுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இராமசாமி படையாட்சியாரின் நினைவைப் போற்றினர். பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தமிழக வெற்றிக்குரல்