வீணா ஜார்ஜ் தாக்குதல் வழக்கு..! 8 பேர் கொண்ட SIT அமைப்பு.

கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது கண்ணூர் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில், சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

KAP 4-வது பட்டாலியன் கமாண்டன்ட் யு. பிரேமன் மற்றும் கண்ணூர் ACP எம்.பி. ஆசாத் ஆகியோர் தலைமையில் மொத்தம் 8 பேர் கொண்ட SIT அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே இன்ஸ்பெக்டர் ஜி.எஸ். சஜி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 3 SI-க்கள் மற்றும் 2 ASI-க்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

புதிய விசாரணைக் குழு, சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் அவரது கன்மேன் ஆகியோரின் வாக்குமூலங்களை மீண்டும் பதிவு செய்ய உள்ளது. சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதம், சம்பவ இடத்தில் பதிவான வீடியோ உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களையும் விசாரணைக் குழு ஆய்வு செய்ய உள்ளது.

மேலும், KSU செயல்பாட்டாளர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டதன் பின்னணியில் உயர்மட்ட சதி நடந்ததாக KSU தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஏற்கனவே ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் அரசியல் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், தற்போது 8 பேர் கொண்ட SIT விசாரணை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply