யூடியூபர் அஸ்வந்த் கோக் கைது செய்யப்பட்டார்.

மது அருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தில் பிரபல யூடியூபர் அஸ்வந்த் கோக்கை கோழிக்கோடு நடக்காவு போலீசார் கைது செய்தனர்.

அஸ்வந்த் கோக் ஓட்டிச் சென்ற வாகனம் எரஞ்சிப்பாலத்தில் நான்கு பேரை மோதியதாக கூறப்படுகிறது. மேலும், அவரது வாகனம் கார் மற்றும் இருசக்கர வாகனங்களிலும் மோதியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற வாகனங்களில் மோதி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல அஸ்வந்த் முயன்றதாகவும், இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாகனத்தில் இருந்து அஸ்வந்த் கோக்கை கீழே இறக்கியபோது அவர் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை போலீசார் காவலில் எடுத்தனர். தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடக்காவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.

Leave a Reply