விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் வத்தலகுண்டு டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்!

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், விநாயகர் சதுர்த்தி விழாவின் இரண்டாம் நாளான இன்று மதுபானம் வாங்குவதற்காக கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், மதுபானக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், மதுபானம் வாங்க வந்த அனைவரும் முறையாக வரிசையில் நின்று காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், மதுபானம் வாங்க வந்தவர்களை வரிசையில் நின்று, அமைதியான முறையில் மதுபானங்களை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

காவல்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று, மதுபானம் வாங்க வந்தவர்கள் எந்தவித குழப்பமும், தகராறும் ஏற்படாத வகையில் அமைதியாக க்யூவில் நின்று சென்றனர்.

ஏற்கனவே இதேபோன்று மற்றொரு மதுபானக் கடை அருகே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் வரிசை முறையில் மதுபானம் வாங்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

Leave a Reply