கொடைக்கானல் ஏரி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை? 30 மதுபாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது.
கொடைக்கானல், செப். 22:
கொடைக்கானல் ஏரி பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்களை வைத்திருந்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கூக்கால் ஊராட்சிக்குட்பட்ட குண்டுபட்டி பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற சக்திவேல் என்பவர், கொடைக்கானல் ஏரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வாகன சோதனை மற்றும் ஏரிக்கரை பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது சூர்யா என்ற சக்திவேலை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை ஆய்வாளர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்