பழனி ஸ்டேட் வங்கி சந்தில் திடீர் தீ விபத்து – தீயணைப்புத்துறையினர் விரைந்து அணைப்பு.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஸ்டேட் வங்கி சந்துக்குள் உள்ள காலி இடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
காலி இடத்தில் குவிந்து கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி, சிறிது நேரத்தில் மளமளவென பரவியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்ததால், பொதுமக்கள் மற்றும் அந்த வழியாகச் சென்றவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தீயணைப்புத்துறையினரின் முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், அருகிலுள்ள கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்