மயிலாடுதுறை மூவலூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் குறைகேட்பு நிகழ்வு!
மயிலாடுதுறை: தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படியும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், கழகப் பொதுச்செயலாளருமான என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் சி.எஸ். கோபிநாத் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மூவலூர் கிராமத்தில் மக்கள் குறைகேட்பு நிகழ்வு நடைபெற்றது.
மயிலாடுதுறை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜி. நிறை பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுமக்களை நேரில் சந்தித்துக் குறைகள் கேட்டறியப்பட்டன. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை நிர்வாகிகளிடம் அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் எஸ். சாமுவேல், என். செல்வபெருமாள், ரகுநாத், பாஸ்கர், ஷங்கர், தினேஷ், சிந்துஜா, லீலாவதி உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்