மயிலாடுதுறையில் அக்டோபர் 23-ல் பெண்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்! அமைச்சர், மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைக்கின்றனர்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பெண்களுக்கான இலவச புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாமை வரும் அக்டோபர் 23ஆம் தேதி நடத்த உள்ளன.
இந்த மருத்துவ முகாம், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் எச்.எஸ். ஸ்ரீகாந்த், ஐஏஎஸ் மற்றும் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைக்க உள்ளனர்.
பெண்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு
இந்த முகாமில் பெண்களுக்கு பல்வேறு வகையான புற்றுநோய்களைக் கண்டறிவதற்கான இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மருத்துவ முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்