சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு கம்பத்தில் இலவச தங்குமிடம்!
ஓய்வு, குளியல், உணவு, பஜனை, மருத்துவ வசதிகளுடன் சிறப்பு கூடாரம் – தவெக எம்எல்ஏ பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா ஏற்பாடு
தேனி – அக்டோபர் 25:
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா சார்பில் இலவச சிறப்பு கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு, தேனி மாவட்டம் வழியாக கம்பத்தைக் கடந்து கேரள மாநிலத்திற்குச் செல்கின்றனர். இந்தப் பயணத்தின்போது பக்தர்கள் ஓய்வெடுக்கவும், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெறவும் இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூடாரத்தில் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கான வசதி, குளிப்பதற்கான ஏற்பாடு, இலவச உணவு, பஜனை செய்வதற்கான இடம் மற்றும் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சீசனையொட்டி தொடர்ந்து மூன்று மாதங்கள் ஐயப்ப பக்தர்கள் இந்த வழியாகப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், அவர்களின் பயணக் களைப்பைப் போக்கவும், தேவையான வசதிகளை இலவசமாகப் பெறவும் இந்த ஏற்பாடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தேனி வழியாகக் கம்பம் கடந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் இந்தச் சிறப்பு கூடாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்