வாணியம்பாடியில் பள்ளி மாணவியைச் சாக்லேட் கொடுத்து அழைத்துச் செல்ல முயற்சி!

திருப்பத்தூர்: வாணியம்பாடி கோணமேடு பகுதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 10 வயது சிறுமியிடம் சாக்லேட் கொடுத்து, தன்னுடன் வருமாறு கூறி அழைத்துச் செல்ல முயன்ற பெண்ணைப் பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

சிறுமியை அழைத்துச் செல்ல முயன்ற பெண்

வாணியம்பாடி கோணமேடு பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்கப்பள்ளியில், வி.வி.எஸ். காலனியைச் சேர்ந்த தேவசேனா என்ற 10 வயது சிறுமி 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளி முடிந்து சிறுமி வீடு திரும்பியபோது, அங்கிருந்த பெண் ஒருவர் அவருக்குச் சாக்லேட் கொடுத்து, “நீ என் பேத்திதான், என்னுடன் வா” என்று கூறி அழைத்துச் செல்ல முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணிடம் காவல்துறை விசாரணை

இதைக் கவனித்த பொதுமக்கள் அந்தப் பெண்ணைப் பிடித்து, நகரக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினரிடம் அப்பெண் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவியைப் பெண் ஒருவர் அழைத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply