அருப்புக்கோட்டையில் தேவர் ஜெயந்தி, குருபூஜை! தமிழக வெற்றிக் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை!
விருதுநகர்: பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அருப்புக்கோட்டை கிழக்கு நகரம் சார்பில் மரியாதை
அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் அமைந்துள்ள பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு நகரம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு நகர நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் மற்றும் கழக அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஏற்பாட்டில் மரியாதை
மேலும், விருதுநகர் மத்திய மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் எம். சுஜிதா ஏற்பாட்டில், பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 64-வது குருபூஜையை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் நகர, வார்டு மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
தமிழக வெற்றிக்குரல்