பழனியில் வ.உ.சி. நினைவு நாள்..! தவெகவினர் மலர் தூவி மரியாதை.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, பழனி வ.உ.சி. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன் தலைமையில், மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். பழனி பாலன் முன்னிலையில், வ.உ.சி. சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பழனி நகரச் செயலாளர் மீதுன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, வ.உ.சி.யின் தியாகத்தையும், சுதேசி இயக்கம் மற்றும் நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூர்ந்தனர்.
மேலும், வ.உ.சி.யின் தேசப்பற்று, தியாக உணர்வு மற்றும் துணிச்சலை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக்குரல்