அண்ணா பிறந்தநாள்: சின்ன காஞ்சிபுரத்தில் தவெக, அதிமுக, திமுக மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக, திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு, வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் சினேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரே இடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்திய நிகழ்வு அப்பகுதியில் கவனம் பெற்றது.

Leave a Reply