பெரியார் பிறந்தநாள்: செய்யாறில் தவெக மாவட்ட செயலாளர் மரியாதை.
செய்யாறு:
தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, செய்யாறில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் M. உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பெரியாரின் சமூகநீதி, சமத்துவம் மற்றும் சுயமரியாதை கொள்கைகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள், தொண்டரணி பொறுப்பாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
தமிழக வெற்றிக்குரல்