கருப்பு பூண்டியில் களைகட்டிய கபடி போட்டி..! எம்.எல்.ஏ. முனிரத்தினம் தொடங்கி வைத்தார்!

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட கருப்பு பூண்டி ஊராட்சியில், தமிழக கட்சி கழகத்தின் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது.

கிழக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் விசு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கபடி போட்டியை, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான முனிரத்தினம் தொடங்கி வைத்தார்.

போட்டியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கபடி அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தின. வீரர்களின் உற்சாகமான ஆட்டத்தால் போட்டி களைகட்டியது.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார், ஒன்றிய நிர்வாகிகள், கபடி வீரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தனர்.

இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், கிராமப்புற கபடி வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலும் நடைபெற்ற இந்த போட்டி, அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

Leave a Reply