கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணாமல் போன சிறுவர்கள் மீட்பு: பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறை!
கிருஷ்ணகிரி, அக்டோபர் 25:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிங்காரப்பேட்டை மற்றும் காவேரிப்பட்டணம் காவல் நிலைய எல்லைகளில் காணாமல் போன 12 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்களையும் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், சிங்காரப்பேட்டை பகுதியில் காணாமல் போன சிறுவன் 24 மணி நேரத்திற்குள்ளும், காவேரிப்பட்டணம் பகுதியில் காணாமல் போன சிறுவன் 4 மணி நேரத்திற்குள்ளும் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட இரு சிறுவர்களும் அவர்களது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, 25.10.2026 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரு சிறுவர்களையும் அவர்களது பெற்றோரையும் நேரில் அழைத்து அறிவுரைகள் வழங்கினார்.
அப்போது, பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் அன்புடனும் புரிதலுடனும் பழக வேண்டும் என்றும், அவர்களின் உணர்வுகள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனில் பெற்றோர் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் காவல்துறையினர் வலியுறுத்தினர்.
தமிழக வெற்றிக்குரல்