புதிதாகத் தொடங்க உள்ள தமிழக வெற்றிக்குரல் ஊடக நிறுவனத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் கல்லணை வாழ்த்து!
மதுரை: புதிதாகத் தொடங்கப்பட உள்ள தமிழக வெற்றிக்குரல் (TVK News) ஊடக நிறுவனத்தின் செய்தியாளர்கள், மரியாதை நிமித்தமாக மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. கல்லணை அவர்களை நேரில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழக வெற்றிக்குரல் ஊடக நிறுவனத்தின் நோக்கம், அதன் செய்திப் பணிகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் எடுத்துரைத்தனர்.
மேலும், சமூக அக்கறையுடன் மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் மற்றும் பொதுநலன் சார்ந்த தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதையும், உண்மைத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு தமிழக வெற்றிக்குரல் தனது ஊடகப் பயணத்தைத் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்குரல் ஊடக நிறுவனம் தனது செய்திப் பணிகளைத் தொடங்க உள்ளதையொட்டி, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. கல்லணை அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மக்களின் குரலாகச் செயல்பட்டு, சமூகப் பொறுப்புடன் செய்திகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழக வெற்றிக்குரல் தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இந்தச் சந்திப்பு, புதிய ஊடக நிறுவனத்தின் தொடக்கப் பயணத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.
தமிழக வெற்றிக்குரல்