மாமரத்துப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, மாமரத்துப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 16.10.2026 அன்று நடைபெற்றது.

பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் அவர்களைத் தமிழகத்தின் முதலமைச்சராகவும், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம், பி.ஏ., பி.எல். அவர்களையும் தேர்ந்தெடுத்ததற்காகப் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

கட்சியின் நிர்வாகி ஏற்பாடு!

உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாமரத்துப்பட்டி முதல் வார்டில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அருள்மொழிவர்மன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply