மேலக்கோட்டை அவுசிங் போர்டில் தொடர் மின்வெட்டு: நேரில் சென்று பிரச்சினையை சரிசெய்த தவெக இளைஞர்கள்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா மேலக்கோட்டை அவுசிங் போர்டு பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களும் சிரமத்திற்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்களுக்கு உடனடியாக கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அறிந்த திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள், மேலக்கோட்டை அவுசிங் போர்டு பகுதிக்கு நேரில் சென்று மின்வெட்டு தொடர்பான பிரச்சினையை பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மின் விநியோகப் பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அப்பகுதியில் மின் விநியோகம் சீராகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், மின்வெட்டு தொடர்பான பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டதாக திருமங்கலம் பகுதி தவெக இளைஞர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply