மேநல்லூர் அரசு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்: மாணவர்களுக்கு உணவு வழங்கி விழிப்புணர்வு.

திருவண்ணாமலை, செப். 22:

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம் மேநல்லூர் அரசு அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர் எஸ். பாரதி கலந்து கொண்டு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் மேலூர் எஸ்.கே.எம். மணிகண்டன், கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் முனியாண்டி, ஜி.வி. அருணகிரி, முன்னாள் ஊராட்சித் தலைவர் துரைமுருகன், முன்னாள் ஊராட்சித் தலைவர் இ. குப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் தயாளன், டி.ஆர்.ஓ. துரைக்கண்ணு, வெம்பாக்கம் மகளிரணி தலைவர் ஆர். சூடாமணி உள்ளிட்டோர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின்போது மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டதுடன், காலை உணவுத் திட்டத்தின் நோக்கம் மற்றும் மாணவர்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி சார்ந்த நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் பயனடைய உள்ளதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply