நெல்லுக்குண்டுபட்டியில் ரூ.45 லட்சத்தில் புதிய துணை சுகாதார நிலையம்! அமைச்சர் பெ. விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

மதுரை:

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வஞ்சிநகரம் ஊராட்சி நெல்லுக்குண்டுபட்டியில், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் இன்று (அக்டோபர் 28) திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இக்கட்டடத்தை அமைச்சர் குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்து, அதன் வசதிகளைப் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சா. சதீஷ் பாபு மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பொற்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம், அப்பகுதி மக்களுக்கு அடிப்படை சுகாதாரச் சேவைகளை வழங்குவதற்கான வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply