பள்ளி, அரசு மருத்துவமனை செல்லும் சாலை இருளில் தவிப்பு – தெருவிளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை!
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே உள்ள பெருங்கட்டூர் கிராமத்தில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள நெடுஞ்சாலையில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, அரசு மருத்துவமனைக்கும் பள்ளிக்கும் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி இருள் சூழ்ந்த சாலையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளி மாணவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இரவு நேரங்களில் வாகனங்கள் சென்று வரும்போது விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், நெடுஞ்சாலையின் தேவையான பகுதிகளில் போதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட்டால், இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சூழல் ஏற்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெருங்கட்டூர் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தேவையான இடங்களில் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்