பழங்குடியினரின் தனித்துவமான உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பங்கள் வரவேற்பு.
சென்னை: தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் பழங்குடியினர் நல இயக்குநரகம் சார்பில், தமிழ்நாட்டின் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகங்களின் தனித்துவமான உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication – GI) பதிவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, புவிசார் குறியீடு தொடர்பான விண்ணப்பப் பதிவு மற்றும் அதற்கான தேவையான பணிகளை மேற்கொள்ள அனுபவம் பெற்ற ஆலோசகர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கைகள் (Expression of Interest – EoI) வரவேற்கப்படுகின்றன.
முன்மொழியப்பட்ட பணிகளின் அடிப்படையில், கள ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துதல், புவிசார் குறியீட்டுக்குரிய பகுதியை வரையறுத்தல், பொருளுக்கும் அதன் உற்பத்திப் பகுதிக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்துதல், ஆதாரங்களைத் தொகுத்தல் மற்றும் பொருட்களின் விவரக்குறிப்புகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், “Statement of Case” தயாரித்தல், உற்பத்தியாளர் அமைப்பை உருவாக்குதல், அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்களைப் பதிவு செய்தல், பின்னர் பதிவு சான்றிதழ் பெறுதல் ஆகிய பணிகளும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருப்பக் கோரிக்கை (EoI), திட்ட மதிப்பீட்டிற்கான செலவினக் கணக்கீட்டை (Price Discovery) மேற்கொள்வதற்காக மட்டுமே கோரப்படுவதாகவும், இதில் பங்கேற்கும் ஆலோசகர்கள் அல்லது நிறுவனங்கள் தங்களது நிதி முன்மொழிவில் உரிய செலவின விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள ஆலோசகர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது தகுதி, திறன் மற்றும் அனுபவ விவரங்களுடன் உரிய நிதி மதிப்பீட்டை tnribalwelfare2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.09.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான **https://www.tntribalwelfare.tn.gov.in/**-ஐ பார்வையிடலாம்.
விவரங்கள் தொடர்பாக:
திரு. ச. பொன்னைய்யநாதன் – 9489941941
திரு. பொ. சிவக்குமார் – 8489458489
ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.
தமிழக வெற்றிக்குரல்