தமிழக வெற்றிக்குரல் செய்தியாளர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மதுரை மேற்கு கழகச் செயலாளர் மா. விஜய்!
உசிலம்பட்டி – தமிழக வெற்றிக்குரல் செய்தி நிறுவனம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், அதன் வளர்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாவட்ட மேற்கு கழகச் செயலாளர் மா. விஜய், பி.ஏ., பி.எல். அவர்களைத் தமிழக வெற்றிக்குரல் செய்தியாளர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, புதிதாகத் தொடங்கப்பட உள்ள தமிழக வெற்றிக்குரல் செய்தி நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து பேசப்பட்டது. அப்போது, தமிழக வெற்றிக்குரல் செய்தி நிறுவனம் மேலும் வளர்ச்சி பெற்று சிறப்பாகச் செயல்பட, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மா. விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது மதுரை மாவட்ட செய்தியாளர் பாண்டி மற்றும் உசிலம்பட்டி தாலுகா செய்தியாளர் சிந்து ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழக வெற்றிக்குரல்