உத்திரமேரூரில் தவெக புதிய ஒன்றிய அலுவலகம் திறப்பு! பெரியார் பிறந்தநாளில் பொதுமக்களுக்கு அன்னதானம்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் உத்திரமேரூர் வடக்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. புதிய அலுவலகத்தை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான ஜா. முனிரத்தினம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட கழக இணைச் செயலாளரும் வடக்கு ஒன்றிய செயலாளருமான ராஜசேகர், மாவட்ட துணைச் செயலாளர் முகேஷ் குமார், ஒன்றிய செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட மாவட்ட மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply