புத்தக வாசிப்பே அறிவின் திறவுகோல்..! வந்தவாசியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் கிளை நூலகத்தில், தேசிய புத்தக வாசிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் நூலக வாசகர்கள் கலந்து கொண்டு பல்வேறு புத்தகங்களை ஆர்வத்துடன் வாசித்தனர். தொடர்ந்து, புத்தக வாசிப்பின் அவசியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் அறிவு குறித்து கிளை நூலகர் ஜா. தமீம் விளக்கிப் பேசினார்.

அப்போது அவர், “வாசிப்பு என்பது நம் அனைவருக்கும் இன்றியமையாத ஒரு சுவாசம் போன்றது. தினந்தோறும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் நூலக வாசகர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர்.

மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து, அறிவுத் தேடலை அதிகரிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைந்தது.

Leave a Reply