டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் உடற்தகுதித் தேர்வு நவம்பர் 11 முதல் 14 வரை – விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது

சென்னை – அக்டோபர் 31: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை-II) தொடர்பான உடற்தகுதித் தேர்வு, வரும் நவம்பர் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அறிவிக்கை எண் 13/2025, நாள் 03.09.2025-ன் வாயிலாக அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட பதவிக்கான உடற்தகுதித் தேர்வு மேற்கண்ட தேதிகளில் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வில் பங்கேற்கத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இதுகுறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளன.

எனவே, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அங்கு வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பதிவிறக்கம் செய்து படிக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில், குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் உடற்தகுதித் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் எனத் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

உடற்தகுதித் தேர்வுக்கான தேதி, இடம் மற்றும் இதர வழிமுறைகளை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply