வாலாஜாவில் அதிரடி சோதனை! வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4.25 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – ரூ.25 ஆயிரம் அபராதம்!

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா காமாட்சி நகர் பகுதியில் உள்ள மஹிந்திரா காம்ப்ளக்ஸில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4.25 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை

மாவட்ட ஆட்சியர் பிரியா அவர்களின் அறிவுறுத்தலின்படி, வாலாஜா காமாட்சி நகர் மஹிந்திரா காம்ப்ளக்ஸில் உள்ள ஒரு வீட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வாலாஜா வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்தச் சோதனையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கண்டறியப்பட்டன. அவற்றின் மொத்த எடை 4.25 கிலோ எனத் தெரிவிக்கப்பட்டது.

புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – அபராதம் விதிப்பு

இதனைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைப்பது மற்றும் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply