அருப்புக்கோட்டையில் இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு! தங்கச் செயின் என நினைத்து கவரிங் செயினை பறித்த மர்ம நபர்!

விருதுநகர்: அருப்புக்கோட்டை – விருதுநகர் சாலையில் உள்ள புளியம்பட்டி பகுதியில், சைக்கிளில் சென்ற இளம்பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயினை, பைக்கில் வந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைக்கிளில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

இளம்பெண் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென அவரது கழுத்தில் இருந்த செயினைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அந்தச் செயின் தங்கச் செயின் என நினைத்து அவர் பறித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அது கவரிங் செயின் என்பது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகள் வெளியீடு – போலீசார் விசாரணை

நல்வாய்ப்பாக, இந்தச் சம்பவத்தில் இளம்பெண்ணுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, செயின் பறிப்பில் ஈடுபட்ட ஹெல்மெட் அணிந்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

Leave a Reply