புனித நீர் ஊற்றப்பட்ட கோபுர கலசம்… அறிவேளூர் நல்லமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரண்ட பக்தர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், அறிவேளூர் கிராமம் நடுத்தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்வாக இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தன.

இதையடுத்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை அறிவேளூர் நாட்டாமை, பஞ்சாயத்தார்கள், கிராம பொதுமக்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply