திண்டுக்கல் அருகே பரபரப்பு: காணாமல் போன டெய்லர் வாய்க்காலில் சடலமாக மீட்பு.
திண்டுக்கல்:
பள்ளபட்டி கொட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த டெய்லர் மதிவண்ணன் (62), காணாமல் போன நிலையில், கொட்டப்பட்டி முத்தாலம்மன் கோவில் பின்புறம் உள்ள வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார்.
மதிவண்ணன் டெய்லராக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை முதல் அவரை காணவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று கொட்டப்பட்டி முத்தாலம்மன் கோவில் பின்புறம் உள்ள வாய்க்காலில் மதிவண்ணன் உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதிவண்ணன் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்