மேலூரில் மின்சார வாரிய வணிக ஆய்வாளர் ரூ.7,000 லஞ்சம் பெற்றதாகக் கைது!

மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் மின்சார வாரிய நகர் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் வணிக ஆய்வாளர் ஆனந்த் (50), மின் பளுவைக் குறைத்துத் தருவதற்காக ரூ.7,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

லஞ்சம் பெற்றபோது பிடிபட்டதாகத் தகவல்

மேலூர் அருகே கருத்தபுளியம்பட்டி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் அறிவழகனிடம், மின் பளுவைக் குறைத்துத் தருவதாகக் கூறி வணிக ஆய்வாளர் ஆனந்த் ரூ.7,000 கேட்டுப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) சத்தியசீலன் தலைமையிலான குழுவினர் ஆனந்தைக் கைது செய்தனர்.

அரசு அலுவலகங்களில் தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கைகள்

மேலூர் நகராட்சி அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு நடத்தியிருந்தனர். இந்நிலையில், ஒரே மாதத்தில் அடுத்தடுத்து அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Leave a Reply