பாலக்கோடு அருகே மாணவி உயிரிழப்பு: கடிதங்கள் கிடைத்ததாகத் தகவல்; போலீசார் விசாரணை!
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள புதுபட்டாணியர் தெருவைச் சேர்ந்த நூருல்லா என்பவரின் மகள் பர்ஹாத், வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் துணிக்கடையில் பணியாற்றி வரும் நூருல்லாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இரண்டாவது மகள் பர்ஹாத், பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்பு
நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்ற பர்ஹாத், மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் அறையைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவைத் திறந்து பார்த்தபோது, அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அவரது அறையில் இரண்டு கடிதங்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்