ஓசூர் அகஸ்தியா வித்யா மந்திர் பள்ளியில் 600 மாணவர்கள் பங்கேற்ற உடற்பயிற்சி நிகழ்ச்சி! ஜாக்சி உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு!
ஓசூர்: இந்திய அரசின் ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தின் விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில், ஓசூர் அகஸ்தியா வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த 600 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட உடற்பயிற்சி நிகழ்வு, ஜாக்சி உலக சாதனைப் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 நிமிடங்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி
அகஸ்தியா வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக இந்த உலக சாதனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 3ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் 600 மாணவர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களைப் பயன்படுத்தி, துல்லியமான ஒருங்கிணைப்புடன் வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சிகளை மாணவர்கள் தொடர்ந்து 20 நிமிடங்கள் செய்து அசத்தினர்.
ஜாக்சி உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு
மாணவர்களின் உடற்பயிற்சி நிகழ்வு உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான ஆதாரங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தச் சாதனை ‘ஜாக்சி உலக சாதனைப் புத்தகத்தின்’ (JACKHI BOOK OF WORLD RECORDS) நிரந்தர ஆவணக் காப்பகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.
ஆரோக்கியமான வாழ்வியல், உடற்தகுதி மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.
கல்வி அதிகாரி பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் எம். நடராஜன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக மாவட்டக் கல்வி அலுவலர் கோபாலப்பா பங்கேற்றார். மேலும், பள்ளி மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாணவர்களின் சாதனையைப் பாராட்டினர்.
தமிழக வெற்றிக்குரல்