அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தீபாவளி பரிசு! அகவிலைப்படி 63% ஆக உயர்வு!
60 சதவீதத்திலிருந்து 3% அதிகரிப்பு – 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்; ஆண்டுக்கு ரூ.1,858 கோடி கூடுதல் செலவு
சென்னை – அக்டோபர் 31:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த உயர்வு 2026 ஜூலை 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் தலைமையிலான அரசு, மக்களின் நலனை முன்னிறுத்திப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதுடன், அவற்றை வடிவமைப்பதிலும், திறம்பட நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியப் பங்களிப்பை அங்கீகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 60 சதவீத அகவிலைப்படியை 63 சதவீதமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
மேலும், இந்த உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,858 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைக்க உள்ளது. 2026 ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்த உயர்வு நடைமுறைக்கு வருவதால், தகுதியுடைய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்