“தொலைபேசி மாணவிகளின் ஆயுதம்; நல்ல விஷயங்களை மட்டுமே பயன்படுத்துங்கள்!” – நீதிபதி தாவூத் அம்மாள் அறிவுரை.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள், கல்வி உரிமைகள் மற்றும் சட்ட விதிமுறைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து விளக்கம்

இந்த முகாமில் நீதிபதிகள் முனுசாமி, தாவூத் அம்மாள், பள்ளித் தலைமை ஆசிரியர் தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவிகளின் பாதுகாப்பு, கல்வி உரிமை மற்றும் சட்ட உரிமைகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், சட்ட விதிமீறல்கள் மற்றும் போக்சோ சட்டம் தொடர்பான விதிமுறைகள் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தொலைபேசியைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்!

மாணவிகளிடையே பேசிய மாவட்ட குற்றவியல் நீதிபதி தாவூத் அம்மாள், தொலைபேசி மாணவர்களின் கையில் உள்ள ஓர் ஆயுதம் போன்றது எனக் குறிப்பிட்டார். அதில் பயனுள்ள தகவல்களும் தேவையற்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளதால், மாணவர்கள் நல்ல கருத்துகளை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், சட்ட விதிமுறைகள் மற்றும் அவற்றை மீறுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து மாணவிகள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த முகாமில் சார்பு நீதிபதி, குற்றவியல் நீதிபதி, பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் திரளான மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

Leave a Reply