மயிலாடுதுறையில் ரூ.1.27 கோடி மதிப்பில் வேளாண் மதிப்புக்கூட்டுதல் மையம் திறப்பு!

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசின் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், 2025–26ஆம் ஆண்டிற்கான வேளாண் மதிப்புக்கூட்டுதல் மையம் மயிலாடுதுறையில் திறந்து வைக்கப்பட்டது. குளிச்சார் பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை, மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் யூனுஸ் திறந்து வைத்தார்.

ரூ.31.86 லட்சம் அரசு மானியம்

இந்த மதிப்புக்கூட்டுதல் மையத்தின் மொத்தத் திட்ட மதிப்பீடு ரூ.127.44 லட்சமாகும். இதில் 25 சதவீதத் தொகையான ரூ.31.86 லட்சம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது.

விவசாயிகள், தொழில் முனைவோருக்குப் பயன்

இந்த மையத்தின் மூலம் விவசாய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு கூடுதல் மதிப்பு பெறுவதுடன், வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தொழில் முனைவோரும் பயன்பெற வாய்ப்புள்ளது.

மேலும், மயிலாடுதுறை பகுதியில் வேளாண் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் இந்த மையம் பங்களிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மையத்தின் உரிமையாளர் ப. பொன்னுசாமி, வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply